குழந்தையின் மத்தாப்பூ - ஹைக்கூ கவிதைகள்
திரு.ஜீவா
43 கண்ணன் பேக்கரி
பாரதி நகர் மெயின் ரோடு (ஒலம்பஸ்)
இராமநாதபுரம்
கோயம்புத்தூர் 641045
அலைபேசி : 6384842078
1
தனிமை தேடி நடக்க/
பின் தொடர்ந்தே வருகிறது/
நிழல்/
2
மிருதங்கம் வாசிக்க/
நினைவில் வந்து போகிறது/
முயலின் குதியல்/
3
சிரிக்கும் குழந்தை/
அடம்பிடித்து வாங்குகிறது/
அழும் பொம்மையை/
4
கண்ணாடி காட்ட/
நெருங்கி வந்து மோதுகிறது/
தொட்டி மீன்கள்/
5
சிறுமியின் உழைப்பு/
கானல் நீராய் போகிறது/
பெண் கல்வி/
6
உடையும் கல்/
தூள் தூளாய் சிதறுகிறது/
சிறுமியின் எதிர்காலம் /
7
குழந்தை தொழிளாளர்கள்/
குறைந்து கொண்டே வருகிறது/
பள்ளியின் வருகைப்பதிவு/
8
எழுந்து செல்ல/
இறந்து கிடக்கிறது எறும்பு/
அமர்ந்த இடத்தில்/
9
மழலையின் சிரிப்பு/
மாறி விடுகிறது/
வாடிய முகம்/
10
சோம்பேறி இளைஞன் /
சுறுசுறுப்புப்பாய் மாறுகிறான்/
தொடுதிரையில் விளையாடுகையில்/
திரு.ஜீவா
43 கண்ணன் பேக்கரி
பாரதி நகர் மெயின் ரோடு (ஒலம்பஸ்)
இராமநாதபுரம்
கோயம்புத்தூர் 641045
அலைபேசி : 6384842078
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக