மாறிவிடுமோ!!! - சிறுகதை
ரா.அழகுராஜ்
த/பெ. செ.ராமமூர்த்தி
138/2, நடுத்தெரு,
சமுசிகாபுரம் 626102.
விருதுநகர் மாவட்டம்.
தொடர்புக்கு:8807339644
மாறி விடுமோ !!! - சிறுகதை
Volume 4 - Issue 2
சட்டென வெயில் கண்ணில் படும் திங்கட்கிழமை காலை ஹை ஸ்கூலுக்குப் போகும் ஆர்வம் இருவர் கண்களிலும் தெரிந்தது.
அடேய் வாடா கிரி,
இவன் எப்பவும் இப்படித் தான் என்ற அலட்டலுடன் குரு சந்தித்துக் கொண்டான்...
வாடா போவோம் என அதிகாரத்தொனியுடன் கிரியைக் கூப்பிட்டு பள்ளிக்கொடத்துக்கு நடந்தான் குரு....
சோல்னா பையை ஆட்டிக்கொண்டே ஆரவாரமில்லாமல் அமைதியான குரு நடந்தான். கிரி மஞ்சப்பையைத் தூக்கி போட்டுக்கொண்டு புழுதி கிளம்பும் மண் சாலையில் பராக் பார்த்துக்கொண்டே நடந்தான்.
அந்த மண்டபத்தில் எப்போதும் போல ஆரவாரம், சிகரெட் வாடை என எந்த மாற்றமும் இல்லாமல், வேலையற்ற இளவட்டங்கள் பள்ளிக்கொடத்துப் பிள்ளைகளுடன் நகையாடிக் கொண்டிருந்தனர்.
வழியிலுள்ள ஆரம்பப்பள்ளியைப் பார்த்து இருவரும் வாயடைத்து நின்றனர். அலாதியான ஆனந்தமும் அன்பும் நிறைந்த இடமல்லவா அது.
இருவர் கண்களிலும் தூண் மறைவில் உட்கார பாலாவுடன் மாறி மாறி சண்டைப் போட்டதும், கந்தப்பன் வாத்தியார் மூன்று பேரையும் முட்டி போட வைத்ததும் நினைவில் முட்டி நின்றன...
பாலாவும் இல்லை இனிமேல் இந்த பள்ளிக்கொடமும் நமக்கில்லை என்ற வருத்தம் கலந்த தோரணையுடன் கிரி தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டு வாடா வேகமா போவோம் என்றான்...
குருவும் அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே நகரும் போது, துட்டுக்காரப்பாட்டி கடை கண்ணில் பட்டது.
அடேய் கிரி வாடா.....
நம்ம துட்டுக்காரப்பாட்டி கடையில மிட்டாய் வாங்கிட்டுப் போவோம் என்றதும் சிரித்துக்கொண்டே போனான் கிரி..
பாட்டி நான் ஐ ஸ்கூலு கிரி இவன் ஐ ஸ்கூலு குரு அப்டின்னு கத்தி சிரித்துக்கொண்டே மிட்டாயை எடுத்தான்..
" அட போடா மாத்தங் கண்ட பயலே, ரெண்டு பேரும் எனக்கு எப்பவும் பேராண்டி தான்டா... பேசாம போறியா என்ன? " என பொய்க் கோபத்தைக் காட்டினாள் துட்டூக்காரப்பாட்டி.
டாட்டா காண்பித்து இருவரும் நடந்தனர்...
பள்ளிக்கொடத்துக்குப் போய் எப்பயும் போல எல்லாத்தையும் செஞ்சிட்டு அமைதியா உக்காந்தான் கிரி... குருவும் அவனைத் திட்டிக்கொண்டே "நீ ஒருநாள் வாங்கப் போற" என்று முனுமுனுத்துக் கொண்டே உக்காந்தான்.
ராசாமணி வாத்தியார் வந்து, யார் செஞ்ச வேலைடா இது? ஒழுங்குஹ மரியாதையா எந்திரிக்கையா இல்ல டீப்பை எடுத்து எல்லாத்துக்கும் அடி குடுக்கவா என கத்தினார்.
பயத்துடன் கிரியைப் பார்த்தான் குரு.
அனைவரும் அமைதியுடன் நின்றனர்.
கிரிதான் சார் என்ற குரல் வந்தவுடன் அனைவரும் திகிலுடன் கிரியைப் பார்த்தனர். எல்லாரும் உக்காருங்க நீ இங்க வாடா என முன்னாடி கூப்டவும் கிரி தயங்கிக் கொண்டே சென்றான்.
குருவின் கண்களிலும் பயம் தொற்றியது. பளிங்கு கல்லைப் போல கண்கள் கலங்கி பளபளத்தது. கிரியை ராசாமணி வாத்தியார் பாராட்டி இனிமே போர்டுல படம் வரையக்கூடாது. வர்ற ஆண்டு விழா ஓவியப்போட்டிக்கு நீ போகனும் என கை குலுக்கினார்...
இருவரும் சிரித்துக்கொண்டே வீட்டுக்கு நடந்தனர். அப்போது பள்ளிக்கொடத்தீ சுவத்தை ஒட்டிய வாய்க்காலுல குப்பையில தண்ணி போகாமல் கட்டி கிடந்ததப் பாத்துக்கிட்டே பின்னால் போனான் குரு. திடீரென நின்ற கிரி சுவரை பார்த்துத் கத்தினான்.
அங்கிட்டு போ கட்டெறும்பு எங்க வந்து ஒன்னுக்கு அடிச்சுட்டு இருக்க பள்ளிக்கூடம் கோயில் மாதிரி தெரியும்ல என்றான்.ஏலே பொடிப் பயலே என ஐம்பது வயது மதிக்கத்தக்க கட்டெறும்பும் தனக்கு சின்ன பையன் கிட்ட முரண்டு இருக்கிறது புதுசு இல்ல என்று மனதில் நினைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.
யார்யா பொடி பைய நான் ஐ ஸ்கூலு கிரி என்று நின்ற தோரணையை பார்த்து குரு சிரித்தான். சிரிக்காதலே என அவனை அதட்டிவிட்டு மிஸ்டர் கட்டெறும்பு இனிமே நீ இங்க ஒன்னுக்கு அடிக்கக் கூடாது இது கக்கூஸ் கிடையாது என்று அவன் பாணியில் கத்தினான்.
இருக்கிற அவசரத்துல... அமைதியா போடா அடி சவட்டிப் போடுவேன்னு கட்டெறும்பும் கரகரத்தான்.அங்கிட்டு போனா அவனுங்க எங்க வந்து வேட்டியை தூக்கி நிக்க போயா அந்தப் பக்கம்னு துள்ளுறாய்ங்க திருப்பி கேட்டா டங்குவார் அத்து போடுவாங்க. இங்க வந்தா இந்த பையன் நிம்மதியாக நிக்க விடமாட்டீங்கான் என புலம்பினான்.
அடேய் நீ இந்த கட்டெறும்பு பத்தி தெரியாம பேசிட்டு இருக்க என் வேலைய பாக்க விடு என்றான். அதெல்லாம் எனக்கு தெரியும் பொது வெளியில சிறுநீர் கழிக்க கூடாதுனு எங்க வாத்தியார் சொல்லியிருக்காருனு இழுத்தான் கிரி. அமைதியா இருடா பெரியவங்கள மதித்து பேசணும்னு அதே வாத்தியார் தான்டா சொன்னாரு. நீங்க அந்த எதிர்ல இருக்குற ஓசி கக்கூசுக்கு போங்க என்று சொல்லிவிட்டு கை காட்டினான் குரு. கட்டெறும்பும் சிரித்துக் கொண்டே நடந்தார்.
ராசாமணி வாத்தியார் இதையெல்லாம் பார்த்துவிட்டு வண்டியில் வீட்டுக்கு போகும்போது இந்த பயகலால "எல்லாம் மாறிவிடுமோ" என சிந்தித்துக் கொண்டே போனார்....
பள்ளிக்கூடத்துப் பெல்லுக்கு கீழே துட்டுக்கார பாட்டி கடை போட்டிருந்தாள். அந்த பெல்ல அடிக்க முந்தியடிச்சு ஓடறத நினைச்சுகிட்டே கடைக்கு போய் காரத்தை வாங்கி இருவரும் மென்றுவிட்டு "எல்லாம் மாறிடுச்சுனு" மொனங்கிகிட்டு கல்ல வச்சு பெல்லுல தட்டினர்.
சத்தத்தை கேட்டு வந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்து கந்தப்பன் வாத்தியார் நல்லா படிக்கிறீகளாடானு ஆவலுடன் கேட்டு விட்டு அவர்கள் இருவரையும் நினைத்து சிரித்துக் கொண்டே உள்ளே போனார்..
ரா.அழகுராஜ்
த/பெ. செ.ராமமூர்த்தி
138/2, நடுத்தெரு,
சமுசிகாபுரம் 626102.
விருதுநகர் மாவட்டம்.
தொடர்புக்கு:8807339644
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக