கவிதைத் தலைப்பு: மேய்ச்சல் வீதிகள்.
ஜனமித்திரன்.
ஆங்கிலப் பேராசிரியர்,
மதுரை.
கொழுத்துத் திரியும்
மனிதர்கள் கையில்
தோல் வார்.
மோப்பம் பிடித்து,
வீதிவலம் சென்று,
தினசரி நடைப்பயிற்சி.
பொழுதல்லாப் பொழுதுகளின்
பொதுவெளியில் நடந்து,
கால் தூக்கி,
மூத்திரம் பெய்து,
வெளிச்சப் புணர்தலுக்காய்
எதிர் பாலினம் தேடி,
கயிற்றின் இழுப்பில்,
அடிமையும்,அடிமையும்
மனிதனும்,நாயுமாய்
நகர்ந்து போகும்
நகர வீதிகள்.
நடைபாதை ஓரம்
இரட்டைக் காலடித்தடங்களும்,
நான்கு காலடித்தடங்களுமாய்
பிதற்றி அலைகிறார்கள்
நாய்களை மேய்ப்பவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக