செப்டம்பர் 30, 2019

பாரதமே நீயே பாரதி - புதுக்கவிதை


பாரதமே நீயே பாரதி - புதுக்கவிதை

தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தாய்,
பிறர் துயர் துடைத்தாய்;
எட்டையபுரத்திலே உதித்தாய்,
எட்டாத கனியை அடைந்தாய்;
சமூகக் கடல் ஆழம் பார்த்து- தமிழ்
சரித்திரத்தை ஆளப் பிறந்தாய்;
சிந்தனையில் சிகரம் தொட்டாய்,
சீரிய கவிதைகள் படைத்தாய் ;
பாரதி என்றால் பாரதமும் வியக்கும்!
பார்கடலிலும் உன் படைப்பு எதிரொலிக்கும்;
பாரினில் பரந்தமைந்த நிலை
உன் படைப்போ!..
பாரதமே நீயே  பாரதி!...
   
 நா. நவரத்தினா,     
இளங்கலைத் தமிழ்  மூன்றாமாண்டு,  தியாகராசர் கல்லூரி,
மதுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக