மே 06, 2019

புதுக்கவிதை

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


★★★★★★★★★★★★★★★★★★★★★★★
தாய்மொழிப் பற்றுகொள் தமிழா

மக்கள் கவிஞர் - ச.தமிழரசன்

​​அகரத்தையும் அன்பையும்
​அணைத்து ஊட்டிய தாயின்
​அருமை உணர்வாய் தோழா
​அறிவைப் பெறுவாய் தமிழா

​தமிழன்னைப் பால் அருந்தி
​தவழ்ந்து வந்து சொல் அறிந்தாய்
​ஊட்டிய சோறு உணர்வன்றோ
​உமிழ் நீரும் தேனன்றோ

​எழுத்தாணி ஏந்திய கைபிடித்து
​எட்டிய அறிவை எல்லாம்
​ஏட்டுக்கல்வியில் எளிதில் உமக்கு
​தீட்டத் தந்தவள் தமிழன்றோ

உணர்வையும் ​உறவையும்
​நட்பையும் நகையையும்
​கற்பையும் காதலையும்
​பற்றாய் கற்றாய் தமிழா

​அகத்தையும் புறத்தையும்
​அறத்தையும் மறத்தையும்
​அனுபவ வாழ்க்கையாய்
​அகிலம் உணரச் சொல்வாய்

​தாய்மொழிப் பற்றுகொள் தமிழா
​தேய்மொழிப் பாசம் தேவையா
​தோய்மொழி ஞானம் எல்லாம்
​தோள் உயர்த்தும் ஞாலம் எல்லாம்.

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
புதுக்கவிதை

அதிகார அரசியல்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
      -வசந்திபாலாஜி

காவல் தெய்வமும்
சாவிற்கு ஆளாக்கப்பட்டது 
தேடிப் போய் 
ஆட்டையும் மாட்டையும் 
கடித்த கூட்டம் 
அருகிருந்த மனுசியைக் 
கவ்வியதில் என்ன விந்தை 
ஊடகத்தின் காதுகள் 
கேட்டதால் இந்தப் பரபரப்பு 
அதிகார அரசியலின் 

மடைமாற்றம் வரும் வரை.

**************************************
புத்தகம்
                  -பாரத்

ஏகாந்தப் பொழுதங்கே ஏந்திய துணை நீயோ...

சங்கடப்பொழுதங்கே அறிவுரைகள் தருவாயோ...

நித்தம் உன்னோடு
நீண்ட கதை பேச
நித்திரைப் பொழுதெங்கும் 
உன் கதைகள் வருகிறதே..!

சின்னஞ்சிறு பொழுது உனைத் தேடி நான் வருவேன்


சத்தமின்றி பல பொழுது உன் மடியில் உறங்கிடுவேன்.


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அன்பு
'''''''''''''''''''''''''''
       -பாகனூர்ச்செல்வன்  

நெஞ்சம் மகிழ்ந்து முகமும் மிகமலர்ந்து 
நெஞ்சார மற்றவர் தந்த பொருளை 
நெஞ்சாரப் பெற்ற மகிழ்வு குறையாது 
நெஞ்சாரத் தந்திடுதல் அன்பு.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


நாம் - கவிஞர் வசந்திபாலாஜி
★★★★★★★★★★★★★★★★★
நீ நீயாகவும் 
நான் நானாகவும்
இருந்த காலம் கடந்து 
நீயின்றி நானில்லை 
நானின்றி நீயில்லை 
நாமின்றி நாமில்லை என்ற 
காலங் கடந்து 
நீ நீயாகவும் 
நான் நானாகவும் 
இருக்க 
நாம் விரும்பினாலும் 
நாம் நாமாக 
இருக்க முடிவதில்லை 
சில காலம் 
நதியின் போக்கில் 
விட்டாலும் 
மீண்டும் நாமின்றி நாமில்லை 
சிவப்பெல்லாம் இனிப்பல்ல 
பச்சையிலும் 
கசப்பு உரப்பு உண்டு 
பாகற்காயும் பச்சை மிளகாயும் 
இனித்த கதை 
எறும்பும் கொசுவும் கடித்த போது 
பதறிய காலம் போய் 
நட்டுவாக்காலியும் நல்ல பாம்பும் 
கடிக்கும் போது 
உணர்ச்சியற்று நாம் 

...

இப்படித்தான் வாழ வேண்டும் 
வாழ்ந்து காட்டுவோம் 
முன்னோடியாய் 
என்ற வீராப்பு 
கற்பூரமாய் மாய்ந்தது 
எப்படி வாழக் கூடாது 
என்பதற்கு இலக்கணமாய் 
இருப்பதை விட 
இல்லாமல் இருப்பது சிறந்தது 
என்றாலும் 
இல்லாமல் போவதற்கு 
இப்படி இருப்பதை 
இப்படியாவது இருப்போம் என்று 
இருக்கும் குற்றுயிராய்
நாம் 

-வசந்திபாலாஜி
************************************


கவிஞர் நிசப்தன் கவிதை
★★★★★★★★★★★★★★★★★
தென்னைக்கு வேர்வச்சு நீங்க
தெருவோட போனதென்ன
வாழைக்கு வேர்வச்சு நீங்க
வாழாம போனதென்ன

வயலெல்லாம் பயிரு வச்சு நீங்க
வயிறெரிஞ்சி போனதென்ன
வளத்ததெல்லாம் வாடிச்சுன்னு நீங்க
வாயடைச்சு போனதென்ன

மழையடிச்சி ஓஞ்சாலும்
வெயிலடிச்சி காஞ்சாலும்
வெறும்வயித்தோட வெள்ளாம பாத்தவுக
புயலடிச்சி போனதென்ன என் தேக்குமரம்
பொசுக்குன்னு சாஞ்சதென்ன

எசக்கு நேர்ந்த போதும்
எலிக்கறி தின்னபோதும்
இந்த முடிவுக்கு ஏகலையே
ஏஞ்சாமீ சாகலையே

ஊரடிச்சி திங்கலையே
ஒழுக்கங்கெட்டு திரியலியே
எங்கசனம் வாழ்க்கையில
ஏஞ்சாமீ இந்தக் கொற

வெள்ளக்கல்லு சீமை போயீ
வெவசாயிக கொற தீக்க
வெத்து ஒடம்போட ராசா
வீதீயெல்லாம் உருண்டாக..

ஊடுபயிர் வளரவச்சு
நாடுவாழ வச்சதுக்கு
நாதியத்த மவளாகி நாங்க
நடு ரோட்டில் நிக்கணுமா

எட்டெடுத்து நடந்தழகை
ஏடுவச்சு படிக்க கூடுமா
எட்டுவழி வந்து நாங்க
தட்டுக் கெட்டுப் போனமைய்யா

மூணுதலமொறையா
முழுமூச்சா பாத்த தொழில்
கருப்புப் பாம்பாட்டம் நெலம்
கையவிட்டு ஓடிருச்சே..

ஆத்த அழிச்சிட்டீக
அண கெட்ட மறந்துட்டீக
சேத்துல சோறு வெளச்ச  ஏஞ்
சீமானையும் கொன்னுட்டீக

நல்லா இருங்க மக்கா
நாம் போறேன் இரயிலடிக்கீ
எல்லாம் போன பின்னே
எலவசந்தான் உசுருகூட.)
★★★★★★★★★★★★★★★★★★★★★

தமிழாற்றுப்படையில் தந்தைப் பெரியாரை உரைத்த கவிப்பேரரசு வைரமுத்துவுக்குப் பாராட்டுப் பாமாலைப் பரிசு.
​மதுரைச் செல்லூர் உபாத்தியாயர்
​முனைவர் ச.தமிழரசன்

​பெரியாரைச் சிறியாரெல்லாம்
​உணர உரைத்தாய்
​ஆற்றுப்படையாய் நிறைத்தாய்
​சிவப்புக்குறுதி ஓடும்
​கருப்புச் சட்டைக்காரரை
​மறுத்துப் பேசுவோர் 
​மண்டையில் சேர்த்தாய்
​கருத்துச் சொன்னவரை
​பொறுத்துப் போகச் சொல்லும்
​போக்கற்ற வீணர்கள்
​உணர உரைத்தாய்
​உரைத்தாலும் உணர
​மறுத்தாரைப் பொறுத்தாய்
​கருப்புச் சூரியனின்
​நெருப்புக் கோபத்தை
​கர்ஜித்தாய் கவிஞா
​கேட்டாலே ரத்தம் சூடேறும்
​வார்த்தைப் போர் புரிந்தாய்
​பகுத்தறிவுப் பகலவனைப்
​பாதாளப் பாமரர்க்கும் சேர்த்தாய்
​நீர் வைரங்கள் தோற்கும் முத்து
​முத்துக்கள் தோற்கும் வைரம்
​எம் வைரமுத்தே வாழ்க வாழ்க.

*****************************************







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக