மதுரையில் தைத்திருநாள் கவிதைத் திருவிழா.
மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து நடத்திய தைத் திங்கள் கவியரங்கில் தமிழறிவு மின்னிதழ் முதன்மை ஆசிரியர் மதுரை செல்லூர் உபாத்தியாயர் முனைவர் ச. தமிழரசன் அவர்கள் "வயலும் வரப்பும்" என்ற தலைப்பில் சிலேடைக் கவிதை வழங்கினார்.
நியு செஞ்சுரி புத்தக நிலைய மேலாளர் அ. கிருஷ்ணமூர்த்தி , சாகித்ய அகதெமி விருதாளர் முனைவர் பா. ஆனந்தகுமார், சோழவந்தானூர் முத்தையா புலவர், கவிஞர் தமிழ்சிவா, கவிஞர் ரோசா முத்தையன், கவிஞர் மதுரை நல்லீசன், கவிஞர் மு. செல்லா, கவிஞர் சாத்தன் குன்றன், கவிஞர் மஞ்சுளா, மாலை முரசு முன்னாள் ஆசிரியர் கவிஞர் அ. முத்துவேலன், கவிஞர் அழகு பாரதி உள்ளிட்ட மதுரை அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாள்: 19.01.2024.
இடம்: மதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக