மார்ச் 08, 2020

எழுந்திட வேண்டும் - புதுக்கவிதை

எழுந்திட வேண்டும் - புதுக்கவிதை.

உலக மகளிர் தினம் !! -- 8.3.2020 எழுந்திட வேண்டும் ! எழுந்திடவேண்டும் !... 
ஏகமாக நீங்களெல்லாம் எழுந்திடவேண்டும் ! ... உயர்ந்திடவேண்டும் ! உயர்ந்திடவேண்டும் ! ... 
உலகம் வியக்க உங்கள் கைகள் உயர்ந்திட வேண்டும் !! ...... அடிமையில்லை  அடிமையில்லை ! அடிமையில்லைதான் ! ..    ஆக்குகின்ற பெண்களென்றும் அடிமையில்லைதான் ! .. நோக்குகின்ற மனிதரெல்லாம் உங்களைத்தானே ... 
நோகச்செய்ய தானினைத்தால் பயப்படவேண்டாம் ! ..... ஜான்ஸிராணி ! 
வீறுகொண்ட வேலுநாச்சியார் ! ... உலகமெல்லாம் தான்வியந்த அன்னை இந்திரா ! ...  
அகிலம் போற்ற சேவைசெய்த அன்னை தெரேசா ! ... 
அவர்கள் காட்டிவைத்த வழிதனிலே எழுந்திடவேண்டும் !! .... வேளாண்மையும் தொழில் துறையும் முன்னேறத்தானே ... 
வேகமாகப் பெண்களெல்லாம் எழுந்திடவேண்டும் ! ... 
வேதனைகள் அத்தனையும் ஒழிந்திடத்தானே - நீங்கள் ... 
வெற்றி காணும் பெண்களாக எழுந்திடவேண்டும் !! ..... 
சாகடிக்கும் வரதட்சணை கொடுமையைத்தானே (?) ... 
சாகடிக்க நீங்களெல்லாம் எழுந்திடவேண்டும் ! ... 
சாதிமத சாக்கடையில் வீழ்ந்திடாமலே  - என்றும் ... சாதனைகள் செய்திடத்தான் எழுந்திடவேண்டும் !!.... 

அனைத்து மகளிருக்கும்  ' மகளிர் தின ' நல்வாழ்த்துக்கள் !! 

மதுரை இலட்சியம் சிதம்பரம் , 
தமிழக இல்லம் , 2-225 , 
கோமதிபுரம் , மதுரை -  625020 .
அலைபேசி: 9486469477

(உலக மகளிர் தினம் !!  பாடல் ... )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக