ஜனவரி 24, 2020

சோளக்கதிர் அரசியல் - கவிதை

சோளக்கதிர் அரசியல் - கவிதை
அ.முத்துவேலன் 
(அகவை முதிர்ந்த தமிழறிஞர்) மதுரை.
தொடர்பெண்: 9489493011) 


வெந்து தின்ற பாதிக்கதிர் 
வீதியில் கிடக்கக் கண்டு 
நொந்து ஓர் அரங்கினில் 
நுழைந்த போது கண்டேன் 
அந்துருண்டை வடிவில் 
அடிகறுத்த சோளக்கதிர் 
சந்துவிட்ட சந்தையில் 
சாதித்த பாப்கானாய்? 


பறித்த சோளக்கதிர் 
பத்துப் பணத்தில் விற்க 
உரித்த கோழிபோல் கொடுத்த 
பாப்கான் எழுபது பணம்!  
பொரி உருண்டைகளோ 
பொதி அளவில் விற்க
அறியாத் தமிழர் ஏனோ 
அதனருமை அறியார் 


மதிப்புக் கூட்டும் பொருள் என்ன 
மன்னர்கள் தின்பண்டமோ? 
சதிகாரர் சந்தை வணிகத்தில் 
சாதனை தில்லுமுல்லுகள்! 
அதிகார ஆலவட்டத்தில் 
அடிமைகளோ விவசாயிகள்? 
விதியிதுவோ என்றவர் 
வீதியில் வீழ்கின்றார் 
----------------------------------------
அ.முத்துவேலன் 
(அகவை முதிர்ந்த தமிழறிஞர்) மதுரை.
தொடர்பெண்: 9489493011) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக