மதுரை கரடிப்பட்டி பெருமாள் மலை.
மதுரையிலிருந்து தேனி செல்லும் சாலையில் , மதுரை காமராசர் பல்கலைக்கழகம் துவங்கும் முதல் முகப்பிற்கு எதிரில் செல்லும் சாலையில் சென்றால் இந்த இடத்தை அடையலாம்.
(முனைவர் ச.தமிழரசன், முதன்மை ஆசிரியர், தமிழறிவு மின்னிதழ், 12.01.2020)
இந்த மலையில் இயற்கையான குகைத்தளம் அமைந்துள்ளது. "இவ்வூர் மக்களால் இது பஞ்சவர் படுகை என அழைக்கப்படுகிறது."(சாந்தலிங்கம், சொ., 2013, மதுரையில் சமணம், ப.52)
பல்வேறு சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன. அதற்கு மேலே தமிழியில் ஒரு வாசகம் இடம்பெற்றுள்ளது. "அது 'சைய் அளன் விந்தை ஊர் கவிய்' என்பதாகும்.
விந்தையூரைச் சேர்ந்த சையளன் என்பவன் அமைத்த குகை என்பது இதன் பொருள். கவிய் என்பது குகை எனப்படும்."(சாந்தலிங்கம், சொ., 2013, மதுரையில் சமணம், ப.53)
பத்திற்கும் மேற்பட்ட சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன.
இங்கு குகையின் முகப்பில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் இரண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன.
அதில் முதல் கல்வெட்டில் இருப்பது
(சாந்தலிங்கம், சொ., 2013, மதுரையில் சமணம், ப.54)
இரண்டாம் கல்வெட்டில் இருப்பது
(சாந்தலிங்கம், சொ., 2013, மதுரையில் சமணம், ப.55)
ஒன்று படுக்கைக்கு அருகில் தனிக்கல்லில் உள்ளது.
இங்குள்ள படுக்கைக்கு அருகில் குழி போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது சமணர் காலத்தில் ஆதூர சாலையாக (மருத்துவம் பார்க்குமிடம்) இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது.
துணைநூல்:
சாந்தலிங்கம், சொ., முனைவர், 2013, மதுரையில் சமணம், மதுரை சமணப் பண்பாட்டு மன்றம், மேக்ஸ் வொர்த் நகர், மதுரை.
கைபேசி: 9894687358
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக